இவ்வாண்டு உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் அதிகரிப்பு..!!

July 13, 2018 2:16 PM

8 0

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின் மே மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2018 மே மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 2% அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்ணானது 2018 மே மற்றும் 2017 மே மாதங்களில் முறையே 105.7 மற்றும் 103.7 எனப் பதிவாகியுள்ளது.

2017 மே மாதத்தின் மாதாந்த உற்பத்திக் கொள்ளளவுடன் ஒப்பிடுகையில் 2018 மே மாதத்திற்கான ´இரசாயனமும் இரசாயனப் பொருள் உற்பத்தியும்´, ´வடிவமைக்கப்பட்ட உலோக உற்பத்திகள்´, ´கோக் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள்´ என்பனவற்றில் முறையே 20.9%, 19.5% மற்றும் 13.5% என குறிப்பிடக்கூடிய அதிகரிப்புப் பதிவாகியுள்ளது. 2018 மே மாதத்திற்கான உணவு உற்பத்தியானது 2.9% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

கைத்தொழில் துறையில் உள்ளடங்கும் ´மின் உபகரண உற்பத்திகள்´, ´இயந்திர உபகரணங்கள்´ மற்றும் ´கடதாசி மற்றும் கடதாசி உற்பத்திகள்´ என்பன 2017 மே மாத உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் முறையே 24.6%, 13.9% மற்றும் 12.8% வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...