இலங்கை வரும் அதிநவீன வாகனத்திற்கு 50 மில்லியன் ரூபா வரி

November 12, 2017 8:46 AM

8 0

இலங்கை வரும் அதிநவீன வாகனத்திற்கு 50 மில்லியன் ரூபா வரி

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அதிநவீன வானத்திற்கு விதிக்கப்பட்ட வரிமுறை குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அதிநவீன வாகனங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய வரி அறவீடுகள் குறித்து வாகன இறக்குமதியாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் இறக்குமதி செய்யும் வாகனங்களில் TOYOTA LAND CRUISER/ CBA-URJ202W (PETROL) என்ற மோட்டார் வாகனமே அதிக விலை கொண்டதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரவு செலவுத்திட்டத்திற்கு அமைய குறித்த வாகனம் 22,970,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

TOYOTA LAND CRUISER/ CBA-URJ202W (PETROL) வாகனத்திற்காக முன்னர் 27,631,750 ரூபாய் வரி அறவிடப்பட்டது.

சமகால நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்திற்கு அமைய TOYOTA LAND CRUISER வாகனத்திற்கு 50,601,750 ரூபா வரி அறவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...