இலங்கை வந்த வெளிநாட்டு தம்பதி மீது கடுமையான தாக்குதல்

December 6, 2017 3:30 AM

6 0

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த தம்பதி ஒன்றின் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாதுவ, பொஹோத்தரமுல்ல பிரதேசத்தில் வைத்து யுக்ரேன் நாட்டு சுற்றுலா தம்பதி மீது கடுமையான தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி மாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல் காரணமாக பெண்ணின் கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதை மறுத்துள்ள நிலையில் மருந்து கடை ஒன்றில் மருந்து பெற்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த இருவரும் பொஹோத்தரமுல்ல கடற்கரை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...