இலங்கையில் மூன்றாவது சர்வதேச விமான நிலையம்!

July 12, 2018 10:12 AM

12 0

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் திருகோணமலையில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கு சமாந்தரமாக இந்த சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளது.

2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் கிழக்கு ஜன்னலாக (பலகனியாக) திருகோணமலையை அபிவிருத்தி செய்யவும் இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்ததாக திருகோணமலையில் புதிய சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...