இலங்கையில் நீதியை நிலைநாட்ட சர்வதேச நீதிப்பொறிமுறை அவசியம்: ஜெரமி கோபின்

May 18, 2018 1:33 AM

8 0

தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து இலங்கையில் நீதியை நிலைநாட்ட சர்வதேச நீதிப்பொறிமுறை அவசியம் என்று பிரித்தானிய தொழிற்கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்தக் கருத்து வெளியிட்டுள்ள தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோபின், இலங்கையில் தமிழர்களின் எதிர்காலத்துக்காக தமது கட்சி தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இனப்படுகொலை மற்றும் மனிதாபிமானத்துக்கான எதிரான சர்வதேச குற்றங்களை இலங்கை அரசாங்கம் செய்துள்ளது.

எனவே காணாமல் போனோர் தொடர்பில் நீதி பெற்றுக் கொடுக்கப்படல் அவசியம் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் நீதி நிலைநாட்டப்படவும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவும் பிரித்தானிய அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தொழிற்கட்சி தலைவர் கோரியுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...