இலங்கையில் இறால் சாப்பிட்டால் உயிர் ஆபத்து ஏற்படுமா?..!!

May 17, 2018 4:09 AM

9 0

இலங்கை இறால் சாப்பிட்டால் உயிராபத்து ஏற்படும் என எச்சரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் தகவல்கள் பரவி வருகிறது.

இலங்கை கடலிலுள்ள இறால்களில் அடையாளம் காண முடியாத ஒரு வகையான வைரஸ் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதனை குணப்படுத்தவும் முடியாதென சில தகவல்களைப் பெற்றுள்ளோம் என குறிப்பிடப்படுகின்றது.

இதனால் உடனடியாக இறால் உட்கொள்வதனை இலங்கையர்கள் தவிர்க்குமாறு கூறப்படுகின்றது.

நீர்கொழும்பிலுள்ள வைத்தியர் ஒருவர் இந்த வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

எனவே இது தொடர்பிலான தகவல்களை இலங்கையில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உடனடியாக பகிருமாறு வட்ஸ்அப் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

எனினும் இது குறித்த வைத்திய அதிகாரிகளால் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...