இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை! நீதி அமைச்சர் தகவல்

October 11, 2017 7:23 AM

8 0

நாட்டில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் புதிய செயலாளராக காமினி செனெவிரத்ன நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே நீதி அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது இலங்கை பல நாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாட்டில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை சிறைக்கைதிகள் மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு சிறைக்கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாடுகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்று எதிர்வரும் சில தினங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...