இலங்கையின் மனித உரிமை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று ஆரம்பம்

November 15, 2017 5:28 AM

15 0

இலங்கையின் மனித உரிமை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று ஆரம்பம்

இலங்கையின் மனித உரிமை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக காலாந்தர மீளாய்வு செயற்குழுவில் இன்று ஜெனீவா நேரப்படி பிற்பகல் 2.30 முதல் மாலை 6.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

இந்த மீளாய்வை தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர்.

இக் குழுவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலக அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

அனைத்துலக காலாந்தர மீளாய்வு என்பது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் சகல நாடுகளினதும் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையை ஏனைய பிற உறுப்பு நாடுகளினால் மீளாய்பு செய்யப்படுவதை குறிக்கிறது.

2006ஆம் ஆண்டு முதல் இது அமுல்படுத்தப்படுகிறது. உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட நாட்டின் மனித உரிமைகள் பற்றிய பரிந்துரைகளை சமர்ப்பிக்கவிருக்கின்றன.

பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவோ, அதனை பதிவு செய்து கொள்வதற்கோ சம்பந்தப்பட்ட நாட்டுக்கு வாய்ப்பு காணப்படுகிறது. இலங்கை 2008, 2012 ஆம் ஆண்டுகளில் அனைத்துலக காலாந்தர மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...