இலங்கையின் தீவுப்பகுதிகளுக்கு உலங்குவானூர்தியில் வாக்குப்பெட்டி

February 9, 2018 12:52 PM

8 0

தீவுப்பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் செயற்பாடு விமானப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு பூராகவும் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தீவுப்பகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் விமானப்படையின் உதவியுடன், உலங்குவானூர்தியில் கொண்டு செல்லப்படுகின்றன.

இதேவேளை, இன்று மாலை அனைத்து வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கும் அதிகாரிகள் சமூகமளித்த பின்னர் ஒத்திகை நடத்தப்படும் என்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...