இலங்கையின் அபிவிருத்திக்கு பின்லாந்து அரசாங்கம் உதவி!

October 11, 2017 12:03 PM

10 0

இலங்கையின் அபிவிருத்திக்கு பின்லாந்து அரசாங்கம் உதவி!

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கான நன்கொடைகளையும், சலுகை அடிப்படையில் கடனுதவிகளையும் வழங்க பின்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான பின்லாந்து ஒத்துழைப்பு நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் இது தொடர்பான ஒப்பந்தம் பின்லாந்து வெளிவிவகார அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கும், பின்லாந்துக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயம் உதவியாக அமைந்தது என்று பின்லாந்தின் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் மீக்கா லின்ட்லா தெரிவித்துள்ளார்.

பின்லாந்து தொழின்முயற்சியாளர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை இலங்கைக்கு வழங்கவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறினார். இலங்கைக்கும், பின்லாந்துக்கும் இடையில் டிஜிட்டல் மயமாக்கம் தொடர்பான ஒப்பந்தமும் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை, பின்லாந்தின் கைத்தொழில் சம்மேளனம் இலங்கையின் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் கூடுதலாக தொடர்புபடவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழல் உருவாகி வருவதாக சம்மேளனம் அறிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் நேற்று இந்தப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...