இலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் மூன்றாவது அறிக்கை நாளை

March 11, 2018 11:05 AM

10 0

இலங்கையின் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளை மையப்படுத்தி செயற்பட்டு வரும் இலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் மூன்றாவது அறிக்கை நாளை வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்தாண்டு பெப்ரவரியில் இந்நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டிருந்த இரண்டாவது அறிக்கையில், “இலங்கை அரசாங்கம் தொடர்ந்து நேர்மையற்ற முறையில் நடக்குமானால், பன்னாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுனர்களின் பங்கேற்புடன் கலப்புப் போர்க்குற்ற நீதிமன்றம் அமைத்தல் உள்ளிட்ட ஐநா மனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்தை எழுத்திலும் கருத்திலும் செயலாக்குவதற்கு முகாமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறுமானால், ஐநா பாதுகாப்பு மன்றம் ஓராண்டுக்குள் இலங்கையின் நிலைமையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டும்” என தனது பரிந்துரையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐ.நா தீர்மானம் இலங்கைக்கு வழங்கிய இரண்டு ஆண்டுகால நீடிப்பில், ஒராண்டு நிறைவுறுகின்ற நிலையில் இந்நிபுணர் குழுவின் மூன்றாவது அறிக்கை வெளிவர இருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த சுயாதீன நிபுணர் குழுவினை, கம்போடிய கலப்பு நீதிமன்ற சர்வதேச சட்ட நிபுணர் றிச்சாட் ரொஜர்ஸ் அவர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகின்றார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...