இலங்கை பொருளாதார பலம் கொண்ட நாடாக மாற்றப்படும்

August 12, 2018 9:26 AM

10 0

கடன் சுமையை குறைத்து இலங்கையை பொருளாதார பலம் படைத்த நாடாக மாற்றப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா - டன்சின் மகாத்மா காந்தி கிராமத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், அரசாங்கம் ஆரம்பித்துள்ள கிராம புரட்சி திட்டத்தை மலையக தோட்டங்களிலும் அமுல்படுத்தவுள்ளோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் உதவியின் கீழ், மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு மலையகத்தில் மேற்கொண்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் டன்சின் தோட்டத்தில் 404 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்தியா 10 இலட்சம் ரூபாவையும், மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு 2 இலட்சம் ரூபாவையும் ஒரு வீட்டுக்காக செலவிட்டுள்ளது.

550 சதுர அடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு வீட்டக்கு 7 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் காணி உறுதிகளுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...