இலங்கை தொடர்பில் உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

October 11, 2017 12:41 AM

9 0

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலான அரசியல் சூழ்நிலை, மீளமைப்பு நடவடிக்கைகளை தாமதிக்கிறது என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

இலங்கையின் வரவுசெலவுத்திட்ட துண்டுவிழும் தொகை 5.2 என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீதத்தில் இருந்து 0.2வீதத்தினால் குறையும் என்று எதிர்ப்பார்க்கிறது.

இது கடந்த வருடம் 5.4வீதமாக இருந்தது. நாட்டில் முன்னெடுக்கப்பட்ட வருமானமிக்க பொருளாதார நடவடிக்கைகளே இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்தன.

பொருளாதாரத்தை பொறுத்தவரையில் கடந்த வருடத்தில் இருந்த 4.4 வீதத்தில் இருந்து 4.6 வீதமாக உயர்வு கண்டுள்ளது. எனினும் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலை எதிர்கால பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.

இயற்கை அனர்த்தங்களும் பொருளாதார பின்னடைவுக்கான காரணங்களாக அமையும் என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...