இருவரின் சடலங்கள் குகைக்குள் இருந்து மீட்பு… அதிர வைக்கும் சம்பவம்

September 16, 2018 3:17 PM

12 0

நுவரெலியா – ராகல பகுதியிலுள்ள குகையொன்றிற்குள் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (16) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் ராகல – சென்லேனாட்ஸ் பகுதியை சேர்ந்த 31 வயதான செல்லையா அசோக் குமார் மற்றும் 29 வயதான மகேஷ்வரன் ரத்னேஷ்வரன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் மிருகங்களை வேட்டையாடுவதற்காக நேற்று (15) சென்றிந்த நிலையில், அவர்கள் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்களுடன் சென்ற நாயின் உடலும் குகைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு இளைஞர்கள் மிருகமொன்றை வேட்டையாடுவதற்காக குகைக்குள் புகை பிடித்துள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இருவரும் குகைக்குள் சென்றுள்ளமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...