இரா­ணு­வம் ஆக்­கி­ர­மித்த தபால் திணைக்­கள காணி­கள் மீட்­கப்­ப­டும் -தபால்­துறை அமைச்­சர்..!!

May 17, 2018 6:20 AM

9 0

வடக்கு மாகா­ணத்­தில் இரா­ணு­வம் ஆக்­கி­ர­மித்­துள்ள தபால் திணைக்­க­ளத்­தின் காணி­கள் மீட்­கப்­பட்டு மீள சேவை­கள் வழங்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தபால் துறை அமைச்­சர் அப்­துல் ஹலீம் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பாண தபால் நிலை­யங்­க­ளுக்கு வாக­னங்­களை கைய­ளிக்­கும் நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பொது­நூ­லக கேட்­போர் கூடத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

இலங்­கை­யி­லேயே தபால் துறை­யில் அதிக இலா­பத்தை வழங்­கிய மாவட்­ட­மாக யாழ்ப்­பா­ணம் விளங்­கி­யுள்­ளது. போரின் கார­ண­மாக பல தபால் நிலை­யங்­க­ளை­யும் காணி­க­ளை­யும் இலங்கை இரா­ணு­வம் ஆக்­கி­ர­மித்து வைத்­துள்­ளது.யாழ்ப்­பாண மாவட்­டத்தைப் பொறுத்­த­வ­ரை­யில் 6 தபால் நிலை­யக் காணி­கள் இரா­ணு­வத்­தி­னர் வசம் உள்­ளன.

இந்­தக் காணி­களை மீட்­ப­தற்­காக பாது­காப்புத் தரப்­பு­டன் நாம் பேச்சு நடாத்தி வரு­கின்­றோம். அவற்றை விரை­வில் விடு­வித்து அங்கு மீள­வும் தபால் நிலை­யங்­களை இயக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

யாழ்ப்பா­ணத்­தில் தபால் நிலை­யங்­க­ளின் சேவை­களை இல­கு­ப­டுத்த வாக­னங்­களை வழங்­கு­கின்­றோம். ஏனெ­னில் யாழ்ப்பாணத் தில் உள்­ள­வர்­க­ளில் பல­ருக்கு புலம்­பெ­யர் நாடு­க­ளில் இருந்து கடி­தங்­கள், பொதி­கள் நாளாந்­தம் வந்­த­வண்­ணம் உள்­ளன. அவற்­றைப் பாது­காப்­பா­க­வும், இல­கு­வா­க­வும் எடுத்­துச் சென்று வீடு­க­ளில் விநி­யோ­கிக்க இந்த வாக­னங்­களை வழங்­கு­கின்­றோம்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...