இந்திய சமாதான நினைவுச்சின்னத்திற்கு இந்திய இராணுவ அதிகாரி மலர்அஞ்சலி..!!

May 14, 2018 5:38 PM

5 0

இந்திய இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவ்ட் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தார்.

இவர்கள் பத்தரமுல்லையிலுள்ள இந்திய சமாதான நினைவுச்சின்னத்திற்கு சென்று இன்று இராணுவ மரியாதை செலுத்தினர்.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் அழைப்பை ஏற்று இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையில் நிலவும் பாதுகாப்பு புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்று இந்திய அதிகாரி தலைமையிலாhன 5பேர் அடங்கிய குழு வருகைதந்துள்ளது.

இவர்கள் இலங்கையில் தங்கியுள்ள காலப்பகுதியில் ஜனாதிபதி பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , பாதுகாப்பு படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி முப்படை தளபதிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

இவர்கள் தியத்தலாவயிலுள்ள இலங்கை இராணுவ கற்கை நெறிப்பீடத்தை பார்வையிடவுள்ளதுடன் ,திருகோணமலை மற்றும் காலி பிரதேசத்திற்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...