இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர் தாக்குதல்: 84 பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை..!!

February 5, 2018 9:05 AM

9 0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று ரஜோரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. ரஜோரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒரு ராணுவ கேப்டன் உட்பட இந்திய ராணுவத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் அத்துமீறல் தொடரும் நிலையில், அங்குள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், ராஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சுமார் 84 பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 3 தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்குள், சுந்தர்பானி முதல் மஞ்சகோட்டே வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஜோரி துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த மாதமும் பாகிஸ்தான் ராணுவம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டதால், ஜம்மு, சம்பா, கதுரா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியையொட்டியுள்ள பள்ளிகளுக்கு 15 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...