இந்து அல்லாத ஒருவருக்கு இந்து மத விவகார பிரதி அமைச்சுப்பதவி: அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்

June 13, 2018 7:10 AM

9 0

இந்து மதத்தவரல்லாத ஒருவரை இந்து சமய அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சராக நியமித்தமைக்கு இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை இந்துமாமன்றத்தால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இந்து மத அலுவல்கள் உள்ளிட்ட மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சிற்கான பிரதி அமைச்சராக இந்து மதத்தவரல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையானது இந்த நாட்டின் இந்துக்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நியமனம் தொடர்பில் இலங்கை வாழ் இந்து மக்களின் சார்பில் நாம் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் இந்து மாமன்றத் தலைவர் மா. தவயோகராஜா அவர்கள் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை தொடர்பு கொண்டவேளை, “இவ்விடயம் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் பேசி தீர்வொன்றினை பெற முயற்சிப்பதாக” அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்து மத அலுவல்கள் அமைச்சிற்கான பிரதி அமைச்சர் பதவியினை உடனடியாக தமிழ் இந்து ஒருவருக்கு வழங்கும் படியும் எதிர்காலத்தில் இவ்வாறான மனக்கசப்பான இந்து மக்களை அதிருப்தி கொள்ளச்செய்கின்ற எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் எனவும் அரசைக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...