இணையத்தில் சுவிஸ் மக்கள் அதிகம் எதை தேடுகிறார்கள் தெரியுமா?..!

May 14, 2018 5:08 AM

6 0

சுவிட்சர்லாந்து மக்கள் இணையத்தை அதிகளவில் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் பார்ப்பது சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.

குயிக்லைன் எனப்படும் இணைய நிறுவனம் இது தொடர்பான சர்வே எடுத்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி சுவிஸில் 59 சதவீத மக்கள் இணையத்தை தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் பார்ப்பதும், 53.8 சதவீத மக்கள் லேப்டாப் மூலம் பார்ப்பதும் தெரியவந்துள்ளது.

அதே போல 40 வயதுக்கு கீழான 80.8 சதவீத பெண்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் ஓன்லைன் செல்வதும், இது ஆண்களை பொருத்தவரையில் 72.5 சதவீதமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

டெலிபோன் நம்பர்கள் மற்றும் முகவரிகளை கண்டுப்பிடிக்கவே சுவிஸ் மக்கள் அதிகளவு இணையத்தை பயன்படுத்துகிறார்கள்.

இது சதவீத அடிப்படையில் 58.2 ஆகும், இதற்கடுத்த இடத்தில் அடுத்தவர்களை தொடர்பு கொள்ள இணையம் பயன்படுகிறது (57.7 சதவீதம்), மூன்றாவது இடத்தில் பாடல்களை கேட்க இணையத்தை (43 சதவீதம்) மக்கள் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...