ஆஸ்திரேலியா: கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாடல் அழகி பலி..!!

September 17, 2017 3:00 PM

10 0

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ப்ரீ கெல்லர் (22). பிகினி மாடல் அழகி. இவர் ரூ.1 கோடி மதிப்புள்ள நிஸான் ஜி.டி.ஆர். ஸ்போர்ட்ஸ் என்ற காரை வாங்கியிருந்தார்.

கார் வாங்கிய 7-வது நாள் இரவு தனது அண்ணன்கள் ஸ்டீவ், ஜெப் ஆகியோருடன் காரில் வெளியே சென்றார். இரவு 3 மணியளவில் இவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் மாடல் அழகி உள்ளிட்ட அனைவரும் காருக்குள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். காருக்குள் சிக்கி கிடந்த ஜோசப் பகாலா (39) என்பரை மட்டும் உயிருடன் மீட்டனர். இவரை வெளியே எடுத்தவுடன் கார் தீப்பிடித்து எரிந்தது.

அந்த விபத்தில் மாடல் அழகி ப்ரீ கெல்லர் அவரது 2 அண்ணன்கள் ஆகிய 3 பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ப்ரீ கெல்லரின் பெற்றோரும், காதலரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...