ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்க மாயாவதி, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு..!!

September 15, 2018 6:05 AM

8 0

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் வரும் 17–ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாநில முதல்–மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத்தலைவர்கள் உள்பட பலருக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்க திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரரான மாயாவதிக்கு நேற்று அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் மாயாவதி நிச்சயம் பங்கேற்பார். மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் கூறின.

பாஜக தலைவர்கள் அளித்த யோசனையின் பேரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...