ஆப்கானிஸ்தானில் தொடரும் தலிபான்களின் அட்டூழியம் – துப்பாக்கிச்சூட்டில் 13 வீரர்கள் பலி..!!

November 5, 2018 6:00 PM

12 0

ஆப்கானிஸ்தானில் ஆளும் அரசை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் போரிட்டு வருகின்றனர். நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது.

ஆப்கானிஸ்தானின் கஜ்னி மாகாணத்தில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பாதுகாப்பு படையினர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அந்த மாகாணத்தின் செய்தித்தொடர்பாளர் ஆரிப் நூரி, தலிபான்களின் இந்த தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 4 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...