ஆந்திர அரசின் உயரிய விருதை வென்ற சூப்பர்ஸ்டார், கமல்

November 15, 2017 3:36 AM

21 0

ஆந்திர அரசின் உயரிய விருதை வென்ற சூப்பர்ஸ்டார், கமல்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினியும், கமலும் தான். நண்பர்களான இவர்களுக்கு நந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

2014 முதல் 2016ம் ஆண்டுகளுக்கான ஆந்திர அரசின் நந்தி விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாதனையாளர்களுக்கான என்டிஆர் தேசிய விருது 2014ம் ஆண்டுக்கு உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், 2015ம் ஆண்டுக்கான விருது மூத்த இயக்குனர் ராகவேந்திர ராவுக்கும், 2016ம் ஆண்டுக்கான விருது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக கமல்ஹாசன் டிவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினி கமலுக்கு நன்றி தெரிவித்ததோடு விருது வழங்கியவர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...