ஆட்சியமைக்க அழையுங்கள்.. எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தோடு ஆளுநரை சந்திக்கும் காங்., மஜத தலைவர்கள்..!! (வீடியோ)

May 16, 2018 12:18 PM

8 0

பெங்களூரில் தனித்தனியாக நடைபெற்ற காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவடைந்த நிலையில், மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோர இரு கட்சி தலைவர்களும் திட்டமிட்டுள்ளநர். காங். தலைவர் பரமேஷ்வர் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூர் குயின்ஸ் சாலையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங். மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். இதேபோல தனியார் ஹோட்டலில், குமாரசாமி தலைமையில் கூடியது, மஜத எம்எல்ஏக்கள் கூட்டம். எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம், மல்லேஸ்வரத்திலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு கட்சியிலும் ஆட்சி அமைப்பது குறித்த வாத, விவாதங்கள் தூள் பறந்தன. தங்கள் கட்சி முடிவுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டனர். கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராம்நகரம் மாவட்டம் பிடதி அருகேயுள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில், தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...