அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லும் இலங்கை அகதிகள்! முகாமுக்குள் திடீரென நுழைந்த அதிகாரி

June 11, 2018 7:29 AM

8 0

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்கு கும்மிடிப்பூண்டி - கடலோர காவல்படை அதிகாரி பாலமுருகன் திடீர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்கள், அவர்களது வருகை பதிவேடு, வெளியூர் பகுதிகளில் வேலை செய்பவர்கள், படிக்கும் மாணவர்கள் விவரம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் அரசின் அனுமதி பெறாமல் பிற நாடுகளுக்கோ இலங்கைக்கோ செல்வது சட்டத்திற்கு விரோதமானது என பாலமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனுமதி பெறாமல் படகில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயல்வது அடிக்கடி நடைபெறுகிறது.

இதுபோன்ற சம்பவங்களில் பலர் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம் எனக் கூறி ஏமாற்றும் நபர்களிடம் இலட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் இந்திய சட்டத்திட்டங்களை மதித்து இருப்பதோடு அவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல விரும்பினால் உரிய முறையில் அனுமதி பெற்று செல்லலாம் எனவும் கடலோர காவல்படை அதிகாரி பாலமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...