அலோசியஸ், பலிசேன ஆகியோருக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் எதிர்ப்பு

February 9, 2018 8:26 AM

6 0

பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில், இருவருக்கும் பிணை வழங்குவதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர்களான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்னவிடம், சட்டமா அதிபர் திணைக்களம் எழுத்து மூலம் இன்று இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இரண்டு தரப்புக்களின் விளக்கங்களை கேட்டறிந்து கொண்ட நீதவான், பிணை மனு குறித்து எதிர்வரும் 16ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...