அருந்திகவின் வருகையால் புத்தளம் மாவட்ட பொதுஜன பெரமுணவில் சலசலப்பு

September 17, 2017 1:48 AM

10 0

முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மீண்டும் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்வதை புத்தளம் மாவட்ட பொதுஜன பெரமுண கட்சி ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த வாரம் புத்தளம் மாவட்ட ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிடம் முறையிட்டுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த அவர் கட்சியை வலுப்படுத்துவதற்காக அருந்திக மட்டுமன்றி இன்னும் பலரையும் கட்சிக்குள் உள்வாங்கும் தேவை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரம் எவர் வந்தாலும் கட்சியின் எந்தவொரு ஆதரவாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அருந்திக பெர்னாண்டோ புத்தளம் மாவட்டத்தில் ஏனைய அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் மீது அடாவடித்தனமான அநீதிகளைக் கட்டவிழ்த்து விட்ட சம்பவங்கள் தொடர்பான அச்சம் அங்குள்ள மக்களிடம் இன்னும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...