அரசியல் பின்புலத்தினூடாக ஊடகங்கள் அடக்கப்படுவதாக அங்கஜன் குற்றம்!!

January 13, 2019 5:03 PM

68 0

அரசியல் பின்புலத்தினூடாக ஊடகங்கள் அடக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டுமென கூறியவர்களே தற்பொழுது ஊடகங்களை அடக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் முறிப்பு பகுதியில் 26 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “அரசியல் பின்புலத்தினூடாக ஊடகங்கங்கள் அடக்கப்படுகின்றன. ஊடக சுதந்திரம் வேண்டும் என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினோம். இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடக சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

மேலும் ஊடகங்களை அடக்குவதன் மூலம் தெற்கிலுள்ள அரசியலை இங்கும் கொண்டு வருவது போல் எண்ணத் தோன்றுகின்றது. ஊடகங்களை அடக்குவது சமுதாயத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் ஊடகங்களின் மூலமே மக்கள் அனைத்தையும் தெரிந்துகொள்கின்றனர். எனவே ஊடகங்கள் சரியா அல்லது பிழையா என்பதை முடிவு செய்வதை விட, சரி எது பிழை எது என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும்“ என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...