அரசின் அனுமதியின்றி நியமிக்கப்பட்ட மிஹின் லங்கா பணிப்பாளர் சபை

June 11, 2018 1:40 PM

9 0

மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் முதலாவது பணிப்பாளர் சபை அரசாங்கத்தின் அனுமதியின்றியே நியமிக்கப்பட்டதாக இன்று தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் நடந்த ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சி விசாரணையின் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்திற்கு முதலாவது பணிப்பாளர் சபையை நியமிப்பது சம்பந்தமான அரசாங்கம் எவ்வித அனுமதியையும் அதிகாரத்தை வழங்கவில்லை. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று ஜந்தாவது நாளாக கூடியது.

மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தின் முதலாவது பணிப்பாளர் சபையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்திர உள்ளி்டோர் அங்கம் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...