அரசாங்கத்தை விட்டு வாருங்கள் இணையலாம்: மகிந்த

December 2, 2017 6:36 AM

4 0

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை எனில் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் ஒரு கொடியின் கீழ் இணைந்து செயற்பட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியுடன் கைகோர்த்து செயற்பட முடியாது அரசாங்கத்தை விட்டு விலகி வந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...