அமெரிக்க துணை ஜனாதிபதி அடுத்த வாரம் மோடியை சந்திக்கிறார்..!!

November 9, 2018 12:00 PM

13 0

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், நவம்பர் 11 முதல் 18 ஆம் தேதி வரை ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது சிங்கப்பூரில் நடைபெற உள்ள அமெரிக்கா- ஆசியன் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் பப்புவா நியூ கினியாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்கிறார்.

பொதுவாக இந்த மாநாடுகளில் அமெரிக்கா சார்பில் அதிபர் கலந்து கொள்வதுதான் வழக்கமாகும். ஆனால் இந்த ஆண்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கோரிக்கையை ஏற்று துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கலந்து கொள்ள உள்ளார்.

தனது நான்கு நாடுகளின் சுற்றுப்பயணத்தின் போது, பிரதமர் மோடியையும் மைக் பென்ஸ் சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

இதேபோல் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹூசைன் லூங், பபுவா நியூ கினியா பிரதமர் பீட்டர் ஒ நெயில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மேரிசன் ஆகியோரையும் மைக் பென்ஸ் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...