அம்பாறையில் அதிகரித்துள்ள மீன்களின் விலை! காரணம் இதுவே

May 14, 2018 8:54 AM

13 0

அம்பாறையில் அதிகரித்துள்ள மீன்களின் விலை! காரணம் இதுவே

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தில் கடல்மீனுக்கு என்றுமில்லாதவாறு தட்டுப்பாடு நிலவுகிறதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில் ஒரு கிலோ பாரைமீன் 1400 ரூபாவுக்கும், கிளவல்லா மீன் 1200 ரூபாவுக்கும் வளையாமீன் 1000 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது.

எனினும் குறித்த மீன்கள் முன்னர் முறையே 1000 ரூபா, 800 ரூபா மற்றும் 600 ரூபாவிற்கு விற்கப்பட்டன.

இதேவேளை, சிறிய மீன்வகைகளான சூடை மீன் ஒரு கிலோகிராம் 600 ரூபாவுக்கும், சாளை போன்ற மீன் 400 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது.

இந்த நிலையில் மீன்விலை அதிகரிப்பிற்கு, மீனுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுவதே காரணம் என தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இறால் மற்றும் நண்டின் விலைகள் கூட 1000 ரூபாவுக்கும் மேலாக காணப்படுகின்றன.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...