அமைச்சரின் ஆசனத்திலா சுவிட்ச் (switch) இருக்கின்றது? அநுர எம்.பி சபையில் கேள்வி

October 9, 2017 8:50 PM

5 0

தான் உரையாற்றிக்கொண்டிருந்த போது எனது ஒலிவாங்கி செயற்பட்டு கொண்டிருந்தது. எனினும், அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல எழுந்தவுடன் எனது ஒலிவாங்கி நிறுத்தப்பட்டுவிட்டது.

அப்படியானால் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல அவர்களின் ஆசனத்திலா ஒலிவாங்கியை செயற்படுத்துவதற்கான சுவிட்ச் (switch) இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அநுரகுமார திஸ்ஸாநாயக்க, வடகொரியாவுடனான தொடர்புகள் குறித்து கேள்வியெழுப்பியிருந்தார்.

இதன் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, “குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகர் மற்றும் அமைச்சர் ஆகியோர் பதில் வழங்கியுள்ளனர்.

உங்களுக்கு வேண்டுமானால் குறித்த விடயம் தொடர்பில் விவாதம் ஒன்றுக்கு கோரிக்கை முன்வைக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் வழங்க முடியும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க ” தான் உரையாற்றிக்கொண்டிருந்த போது எனது ஒலிவாங்கி செயற்பட்டுக் கொண்டிருந்தது.

எனினும், அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல எழுந்தவுடன் எனது ஒலிவாங்கி நிறுத்தப்பட்டுவிட்டது.

அப்படியானால் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல அவர்களின் ஆசனத்திலா ஒலிவாங்கியை செயற்படுத்துவதற்கான சுவிட்ச் (switch) இருக்கின்றது. தனது கோரிக்கையை முன்வைக்க இடம் தரவேண்டும்.

கண்டி நெடுஞ்சாலை குறித்தோ, சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பிலே அல்லது அவரது துறைசார்ந்த கேள்வியெழுப்பினால் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல குறுக்கிட்டு பேசலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...