அபி­வி­ருத்­தி­யில் தமி­ழர் பிர­தே­சங்­கள் திட்­ட­மிட்டே புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­ன்றன – சிறீதரன்

October 8, 2017 3:32 PM

7 0

அபி­வி­ருத்­தி­யில் தமி­ழர் பிர­தே­சங்­கள் திட்­ட­மிட்டே புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­ன்றன – சிறீதரன்

தமி­ழர் தாய­கப் பிர­தே­சங்­கள் திட்­ட­மிட்ட வகை­யில், அபி­வி­ருத்­தி­யில் தொடர்ந்­தும் புறக்­க­ணிக்­கப்­பட்டே வரு­கின்­றன.

தமிழ்­மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பூர்த்­தி­ செய்­யாது அவர்­க­ள் அவ­லத்துக்குள்ளாக்­கப்­ப­டு­கின்­ற­னர். இதன்­மூ­லம் மக்­களைத் த­மது பூர்­வீக வாழ்­வி­டங்­களை விட்டுக் குடி­பெ­யர்ந்து செல்­ல­வைப்­ப­தும், ஏதி­லி­க­ளாக அலைய வைப்­ப­துமே திட்­டம் – என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் தெரி­வித்­தார்.

பூந­க­ரிப் பிர­தே­சத்துக்குச் சென்ற நாடா­ளுன்ற உறுப்­பி­னர் அங்கு நீண்­ட­கா­ல­மாக சீர­மைக்­கப்­ப­டா­மல் காணப்­ப­டும் வலைப்­பாடு,கிராஞ்சி, பாலாவி ஆகி­­ய கிரா­மங்­க­ளைப் பார்­வை­யிட்­டார்.

இப்­ப­குதி மக்­கள் அடிப்­படை வச­தி­க­ளற்ற வகை­யில் அவ­லப்­ப­டு­வதை பொறுப்­பு­வாய்ந்த அமைச்­சர்­கள், உய­ர­தி­கா­ரி­கள் என­அ­னை­வ­ருக்­கும் நேர­டி­யா­க­வும் கடித மூல­மா­ க­வும் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

எனி­னும், இப்­ப­கு­தி­க­ளைத் திரும்­பிக் கூ­டப்­பார்க்­கா­மல் இருக்­கின்­றார்­கள். இதி­லி­ருந்தே இவர்­க­ளது மறை­மு­கத் திட்­டங்­கள் வெளிப்­ப­டு­கின்­றன.

இதற்கு இங்­குள்ள பொறுப்­பு­வாய்ந்­த­வர்­கள் சில­ரது பொறுப்­பற்ற செயல்­க­ளும் துணை­ பு­ரி­வ­ தா­கவே அமைந்­து­கா­ணப்­ப­டு­கின்­றன. பூந­க­ரிப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்­குட்­பட்ட இப்­ப­கு­தி­கள் விரை­வில் அபி­வி­ருத்தி செய்­யப்­பட வேண்­டும்.

இங்­குள்ள மக்­க­ளும்­ஏ­னைய பகு­தி­க­ளில் வாழும் மக்­கள் போன்று வாழ­வேண்­டும் என்­ப­தில் நாம் உறு­தி­யோடு செயற்­பட்டு வரு­கின்­றோம் – –என்­றார்.

ஆதாரம்: eeladhesam.com

வகை பக்கம்

Loading...