அப்பச்சி வருகின்றார்! மஹிந்தவைக் கண்டு சத்தமிட்ட குழந்தை

September 17, 2017 6:26 AM

12 0

அப்பச்சி வருகின்றார்! மஹிந்தவைக் கண்டு சத்தமிட்ட குழந்தை

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவைக் கண்டவுடன் சிறுகுழந்தையொன்று அப்பச்சி (அப்பா) வருகின்றார் என்று உற்சாகமாக சப்தமிட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச அநுராதபுரத்தில் மதவழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

மஹிந்தவின் வருகையை அறிந்து ஏராளமான ஆதரவாளர்கள் அப்பிரதேசத்தில் குழுமியிருந்த நிலையில் அவரும் ஆதரவாளர்கள் மத்தியில் சென்று சிநேகபூர்வமாக உரையாடியுள்ளார்.

இந்த நிலையில் மகிந்தவைக் கண்டதும் சிறு குழந்தையொன்று அதோ அப்பச்சி (அப்பா) வருகின்றார் என்று உற்சாகமாக சப்தமிட்டுள்ளது.

அதனைச் செவிமடுத்த மகிந்தவும் அக்குழந்தையின் அருகில் சென்று தலையைத் தடவிக் கொடுத்து சிறிதுநேரம் அக்குழந்தையுடன் செலவழித்துள்ளார்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...