“அதிரடி” இணையத்தில், உடனுக்குடன் தேர்தல் முடிவுகள்… (அறிவித்தல்)

February 5, 2018 11:33 AM

11 0

“அதிரடி” இணையத்தில் உடனுக்குடன் தேர்தல் முடிவுகள்… (அறிவித்தல்)

அடுத்த சனிக்கிழமை (10.02.2018) இலங்கையில் அனைத்து மாகாணத்திலும் நடைபெறும் தேர்தல் முடிவுகள், வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் போன்ற அனைத்து விடையங்களையும் உடனுக்குடன் “அதிரடி” இணையம் பதிவேற்றம் செய்வதற்கு தயாராகி வருகின்றது.

அத்தோடு சனிக்கிழமை (10.02.2018) காலை முதல் தேர்தல் தொடர்பான சகல செய்திகளையும் சம்பவங்களையும் பதிவேற்றம் செய்வதற்கு தயாராகிறோம்.

“அதிரடி” இணையத்தின் நிருபர்கள், விசேட செய்தியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றோரின் உதவியுடன் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் “அதிரடி” இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

உலகெங்கும் வாழும் அதிரடி வாசகர்களின், நேயர்களின் விருப்பத்திற்கு இணங்க இதனை நாம் முன்னெடுத்துள்ளோம். நீங்களும் இணைந்திருங்கள் “அதிரடி” இணையத்துடன்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...