அடுத்த ஆண்டிற்கான வருமான இலக்கு 2.2 லட்சம் கோடிகள்

October 8, 2017 7:03 PM

4 0

எதிர்வரும் 2018ம் ஆண்டிற்கான வருமான இலக்காக 2.2 லட்சம் கோடிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான தகவல்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், அடுத்த ஆண்டில் அரசாங்கத்தின் வருமானமாக 2.2 ட்ரில்லயன் ரூபா அதாவது 2.2 லட்சம் கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதில் 1.7 ட்ரில்லியன் ரூபா கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடன்களுக்கான தவணைக்கொடுப்பனவுகளுக்கே செலவாகிவிடும்.

அதிலும் குறித்த கடன்களில் 84 வீதமானவை மஹிந்த ராஜபக்‌ச நிதியமைச்சராக இருந்து கொண்டு பெற்றுக் கொண்ட கடன்களாகும்.

கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன்களுக்கான தவணைக் கட்டணங்களை செலுத்த இன்னும் பல ஆண்டுகள் வரை பெரும் தொகையொன்றை செலவிட நேரிடும்.

இதன் காரணமாக அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட நடைமுறைச் செலவுகள் மற்றும் அபிவிருத்திகளுக்காக 600 பில்லியன் ரூபா மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...