அட்டை வளர்ப்பாளர்களுக்கும் அமைச்சர் தயா கமகேவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

July 7, 2018 9:22 PM

12 0

வடமாகாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்த சிறு கைத்தொழில் அமைச்சர் தயா கமகே கிளிநொச்சியில் உள்ள அட்டை வளர்ப்பாளர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

பூநகரி ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுசங்க சமாச மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கடலட்டை வளர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் கடலட்டை பண்ணைகளை புதிதாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் அமைச்சர் தயா கமகே இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடலட்டை வளர்ப்புடன் பாசி வளர்ப்பதற்கான கற்கள் வழங்கப்பட்டு, பாசி வளர்ப்பு முறை மூலமும் வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், அமைச்சரின் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சத்தியசீலன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...