அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு..!!

November 10, 2018 7:05 PM

13 0

இந்த மருத்துவமனையில் கடந்த 9 நாட்களில் 18 பச்சிளங்குழந்தைகள் பலியாகி உள்ளன. பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகள் மருத்துவமனை அலட்சியத்தால் ஏற்படவில்லை என்று மருத்துவமனை சூப்பிரண்டு தேபஜித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகமும் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது.

சில சமயங்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இதனால் நோய் தொற்று அதிகமாகி அதிக அளவிலான குழந்தைகள் பலியாகி இருக்கலாம்.

பலரும் கடைசி சமயத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டதால் குழந்தைகள் எடை குறைவாக பிறந்துள்ளதும் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...