அச்சுறுத்தி பணம் பறித்த பிரசன்ன ரணதுங்க?

June 11, 2018 9:15 AM

8 0

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 64 மில்லியன் பணத்தை பெற்றுக்கொண்டமை உட்பட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உட்பட மூன்று பேருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன முன்னிலையில் சாட்சி விசாரணை நடைபெற்றது.

அப்போது சாட்சியமளித்த வர்த்தகர், கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரசன்ன ரணதுங்க தனக்கு பணத்தை வழங்குமாறு அச்சுறுத்தியதாக கூறியுள்ளார்.

அன்றைய தினமே பிரசன்ன ரணதுங்க அவரது மூன்று பாதுகாப்பு அதிகாரிகளுடன் வர்த்தக நிலையத்திற்கு வந்து அன்றைய தினமே பணத்தை தர வேண்டும் என அச்சுறுத்தியதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரசன்ன ரணதுங்க அச்சுறுத்தல் விடுத்த தொலைபேசி உரையாடல் தொடர்பான குரல் பதிவும் நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...