அக்டோபர் 15 முதல் உலக அழிவு தொடங்குகிறதா..!!

October 11, 2017 12:00 AM

8 0

எதிர்வரும் அக்டோபர் 15-ம் திகதி முதல் உலக அழிவு தொடங்கி அடுத்த 7 ஆண்டுகளுக்குள் உலகம் முற்றிலுமாக அழிந்துவிடும் என அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுக்குறித்து டேவ் மீடி வெளியிட்ட தகவலில் ‘கடந்த ஆகஸ்ட் 21-ம் திகதி அமெரிக்காவில் தோன்றிய சூரிய கிரகணம் உலக அழிவிற்கு முதல் குறியீடாக அமைந்துள்ளது.

இதற்கு பின்னர், அமெரிக்காவை புயல் தாக்கியது, உலகம் முழுவதும் நிலநடுக்கம் மற்றும், சுனாமி எச்சரிக்கை உள்ளிட்டவைகள் இந்த அழிவை ஊறுதிப்படுத்துகின்றன.

இந்நிகழ்வுகள் பூமி மீது நிபுரு என்ற எரிக்கல் மோதி அழிக்கும் நிகழ்விற்கு முன்னோடியாக அமைந்துள்ளது.

சுனாமி, நிலநடுக்கும், கடுமையான புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் உலகம் அழியும்.இதுமட்டுமில்லாமல், அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளிடம் அணுகுண்டு உள்ளதால் இவையும் உலக அழிவுக்கு காரணமாக இருக்கிறது.

அக்டோபர் -15 முதல் தொடங்கும் இந்த அழிவு அடுத்த 7 ஆண்டுகளுக்குள் உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் என டேவ் மீடி தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...