ஃபிபா உலகக் கோப்பை… அணிகள் அலசல் – போர்ச்சுகலுக்கு ரொனால்டோ மட்டும் போதுமா..!!

June 13, 2018 7:47 AM

7 0

:21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.

கால்பந்து என்பது ஒரு குழு ஆட்டம். அணியாக விளையாடினால்தான் வெற்றி பெற முடியும். ஆனால், உலகின் தலைச் சிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற தனி நபரை மட்டுமே அந்த அணி நம்பியுள்ளது.

ரொனால்டோவால் தான் போர்ச்சுகல் அணிக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்துள்ளது. மிகவும் அதிரடியான, திறமையான முன்கள வீரராக ரொனால்டோ உள்ளார்.

அந்த அணியின் முக்கியமான பலம், தடுப்பாட்டமே. பீபே, புரூனோ ஆல்வெஸ் ஆகிய நடுகள தடுப்பாட்டக்காரர்கள் 35 வயதைத் தாண்டியவர்கள். அதே நேரத்தில் 21 வயதாகும் ரூபென் டயஸ் அதிக அனுபவம் இல்லாதவர்.

பின்கள தடுப்பாட்டகாரர்கள் பந்தைக் கடத்திச் சென்று நடுகள வீரர்களுக்கு கொடுப்பார்கள். அவர்கள் தடுப்பாட்ட வீரர்கள் மூலம் ரொனால்டோ அல்லது ஆந்தரே சில்வாவுக்கு பாஸ் செய்வார்கள். இதுதான் அவர்களுடைய வழக்கமான பாணியாக உள்ளது.

மிகவும் போரடிக்கக் கூடிய முறையாக இருந்தாலும், போர்ச்சுகல்லுக்கு நல்ல பலனைத் தந்து வருகிறது. ஆனால், உலகக் கோப்பையில் இது எடுபடுமா என்பது அதை எதிர்த்து விளையாடும் அணிகளின் ஆட்டத்தைப் பொறுத்து உள்ளது.

2016 யூரோ சாம்பியனான போர்ச்சுகல், முதல் சுற்றைத் தாண்டிவிடும். ஆனால், காலிறுதிக்கு நுழையுமா என்பது சந்தேகமே. ரொனால்டோ மட்டும் இருந்தால் போதுமா.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...