Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

காப்பகம்: அனைத்து செய்தி

 • மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து – 6 பேர் பரிதாப பலி..!!

  January 15, 2019 3:05 PM 206

  மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் மாவட்டத்தில் நர்மதை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் படகு சவாரி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நர்மதை ஆற்றில் இன்று சென்ற படகில் சுமார் 60க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆற்றின் நடுவில் சென்றபோது படகு நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த மீட்புக் குழுவினர

 • வெனிசுலாவில் நாடாளுமன்ற சபாநாயகர் கைது – அமெரிக்கா கண்டனம்..!!

  January 15, 2019 9:00 AM 202

  வெனிசுலா நாடாளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள் நிகோலஸ் மதுரோ 2-வது முறையாக அதிபர் ஆவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் அவர் கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய

 • தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் – திருச்சியில் 20-ந் தேதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்..!!

  January 15, 2019 8:05 AM 205

  தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் 20-ந் தேதி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார். சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது. விழாவில் புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெறும். இதற்கான கட்டமைப்பு வசதிகளுக

 • அரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி!! (படங்கள்)

  January 15, 2019 5:21 AM 231

  2019 ஆம் ஆண்டுக்கான நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான ஆண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியானது சனிக்கிழமை (12.01.2019) அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் அரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டிற்கான வெற்றிக் கேடயத

 • அரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகம் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டது.!! (படங்கள்)

  January 15, 2019 5:16 AM 211

  2019 ஆம் ஆண்டுக்கான நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியானது ஞாயிற்றுக்கிழமை (13.01.2019) அரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின்; இறுதிப் போட்டியில் அரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து அரியாலை

 • ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 40 பேர் காயம்..!!

  January 15, 2019 5:00 AM 210

  ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் வெளிநாட்டவர் வசித்த வளாக பகுதியில் இன்று கார் வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இதனால் அருகில் இருந்த குடியிருப்பு வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 40 பேர் காயமடைந்தனர். இந்த வளாகத்தில் சமீபத்தில் ஐ.நா. சபை ஊழியர்கள் சிலர் வசித்து, பணிபுரிந்து வந்தனர். ஆனால் சம்பவம் நடந்தபொழுது ஒரு சில காவலர

 • பிணவறையில் இருந்து உயிருடன் எழுந்த பெண்..!!

  January 14, 2019 11:00 PM 216

  ரஷ்யாவில் இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட பெண் திடீரென எழுந்த நிலையில் பின்னர் மீண்டும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Amur பகுதியில் உள்ள 62 வயதான பெண் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த பொலிசார் அப்பெண் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். பின்னர் இறப்பு சான்றிதழை கொடுத

 • நண்பரின் மனைவியுடன் புகைப்படம்: அச்சத்தில் உலக கோடீஸ்வரர்..!!

  January 14, 2019 10:30 PM 212

  அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் தமது காதலியுடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் கசியலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி நட்சத்திரம் லாரன் சான்சஸ் என்பவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஜெஃப் பெஸோஸ் தமது மனைவி மிக்கின்ஸியை விவாகரத்து செய்ய உள்ளார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட காதல் சொட்டும் குறுந்தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில

 • ரபேல் விவகாரம் தொடர்பான தீர்ப்பில் மறுபரிசீலனை – சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி முறையீடு..!!

  January 14, 2019 9:05 PM 208

  ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு அளித்த விளக்கம் திருப்தியளிப்பதாகவும், போர் விமானங்களின் விலை நிர்ணயம் தொடர்பான மத்திய அரசின் முடிவு தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்று கூறியும் மேற்படி பேரம் தொடர்பாக தொடரப்பட்ட 4 வழக்குகளை கடந்த 14-12-2018 அன்று சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்நிலையில

 • மத்திய பிரதேச துணை சபாநாயகரின் பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதியது- 4 பேர் பலி.

  January 14, 2019 6:05 PM 214

  மத்திய பிரதேச சட்டமன்ற துணை சபாநாயகரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஹீனா கான்வரே, நேற்று இரவு தனது தொகுதியான லாஞ்சியில் இருந்து காரில் வந்துகொண்டிருந்தார். அவரது பாதுகாவலர்கள் தனி காரில் பின்னால் வந்துகொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் சேல்டேகா கிராமம் அருகே வந்தபோது, எதிரே ஒரு லாரி அதிவேகமாக வந்தது. அப்போது லாரி மீது மோதாமல் இருப்பதற்காக துணை சபாநாயகரின