Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

298 குடும்பங்கள் குடிநீர் இன்றி தவிக்கும் பரிதாபம்

October 10, 2017 9:57 AM
1 0

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் குடிநீர் கிணறுகள் வற்றியுள்ள நிலையில் இங்குள்ள மக்கள் குடிநீர் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

298 வரையான குடும்பங்கள் கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் தண்ணீர் தேவைகளுக்காக அமைக்கப்பட்ட 11 பொதுக் கிணறுகளிலும் நீர் வற்றிப் போய் காணப்படுகின்றன.

இதைவிட ஏழு குழாய்க் கிணறுகளில் நான்கு கிணறுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

இதனால் இங்கு வாழும் 298 வரையான குடும்பங்களும் குடிநீர் தேவை மற்றும் ஏனைய தேவைகளுக்கான தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

“நாங்கள் எங்கள் சொந்த நிலத்தில் எந்த வறட்சிக் காலங்களிலும் தாக்குப்பிடிக்கக்கூடிய கிணறுகளை கொண்டு வாழ்ந்தோம். எங்களின் நிம்மதியை சிதைக்கும் வகையிலும் எங்களை கஸ்டப்படுத்தும் வகையிலும் இவ்வாறு நலன்புரி நிலையத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் குடிநீர் முதல் தொடங்கி தொழில் வாய்ப்பு வாழ்வாதாரம் எல்லாவற்றுக்கும் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக” இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0