Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

21ஆவது உலக மீனவ தினத்தை முன்னிட்டு மன்னாரில் மாபெரும் பேரணி

November 28, 2017 5:38 AM
1 0

உலக மீனவ தினத்தை முன்னிட்டு சமூக பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை அடிப்படை மனித உரிமையாக புதிய யாப்பினுள் உறுதிப்படுத்துவோம் எனும் தொனிப் பொபொருளில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வழி நடத்தலில் இன்றைய தினம் அந்த பேரணி முன்னெனெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையில் இருந்து காலை 9 மணியளவில் பேரணியாக ஆரம்பமாகி தலை மன்னார் வீதி ஊடாக நகரசபை மண்டபத்தை வந்தடைந்த நிலையில் மீனவ தின நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

குறித்த உலக மீனவ தினத்துக்கு 14 மாவட்டங்களை சேர்ந்த மீனவ மற்றும் விவசாய மக்கள் கலந்து கொண்டதுடன், வட மாகாணசபை கமநல, விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சர் க.சிவனேசன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0