Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஹர்த்தாலுக்கு வவுனியா வர்த்தக சங்கம் பூரண ஆதரவு!

October 12, 2017 3:03 PM
1 0
ஹர்த்தாலுக்கு வவுனியா வர்த்தக சங்கம் பூரண ஆதரவு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தி வட. மாகாணம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு வவுனியா வர்த்தக சங்கம் தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா வர்தக சங்கம் ஆதரவு வழங்குவது தொடர்பான கூட்டம் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகர் சங்கத் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் நாளை நடைபெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்குவதற்கு முடிவு எட்டப்பட்டதாக வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுர சிறையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களின் வழக்கு விசாரணைகளை வவுனியா நீதிமன்றுக்கு மாற்றுமாறும் அவர்களை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுவருகின்ற நிலையில் நாளை வட. மாகாணத்தில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0