Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன் 74 கோடி டொலர்! பிரதமர் தகவல்

November 14, 2017 3:09 AM
1 0

ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன் 74 கோடி டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த ஆட்சியில் சில திட்டங்களுக்கு ஒதுக்கிய செலவை விட 3 மடங்கு வரை பெறுமதியான தொகை செலுத்த நேரிட்டது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக கடன் மற்றும் விமானங்கள் பெறப்பட்டாலும் கடனை செலுத்த முடியவில்லை. இது நஷ்டத்தில் இயங்குகிறது. அதன் கடன் 74 கோடி டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக 3 இலட்சம் கோடி டொலர் கடன் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், 2020ஆம் ஆண்டாகும் போது கடன் சுமை குறைவடையும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0