Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஸ்பெயினில் இருந்து இலங்கை ஊடகவியலாளர் ஒருவருக்கு தபாலில் வந்த ஆபத்தான பொருள்

April 17, 2018 5:54 PM
11 0
ஸ்பெயினில் இருந்து இலங்கை ஊடகவியலாளர் ஒருவருக்கு தபாலில் வந்த ஆபத்தான பொருள்

ஸ்பெயின் நாட்டில் இருந்து இலங்கை ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பட்ட Hashish எனப்படும் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் இன்றைய தினம் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு - மத்திய தபால் நிலையத்தில் வைத்து இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு இந்த போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெய்ன் நாட்டில் உளள நபர் ஒருவரினால் அனுப்பட்டிருந்த பொருட்களுக்குள் இந்த போதைபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ 400 கிராம் அளவிளான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 1.4 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அனுப்பட்ட பொருளை பெற்றுக்கொள்ள வந்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0