Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

விவசாய அமைச்சருக்கே உர மானியம் கிடைக்காத நிலைமை

May 15, 2018 2:47 PM
4 0

விவசாய அமைச்சருக்கே உர மானியம் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. இரசாயனப் பயன்பாடற்ற விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தை அரசாங்கம் குறைத்துள்ளது.

இதனால் இரசாயன பயன்பாடற்ற விவசாயத்தில் ஈடுபடும் விவசாய அமைச்சருக்கே கிடைக்கவில்லை. இரசாயன பயன்பாடற்ற தேசிய விவசாய வலையமைப்பு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள போதிலும், அவருக்கு குறித்த உர மானியம் கிடைக்கவில்லை என குறித்த அமைப்பின் தலைவர் பிரியந்த பதிரன இன்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விவசாய பயன்பாடு அற்ற விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியங்களை பெற்றுக் கொடுக்க போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விடயம் குறித்து விவாசய அமைச்சர் தரப்பில் எவ்வித பதில்களோ தகவல்களோ வெளியிடப்படவில்லை.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0