Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

வாள்­வெட்­டுக் குழு வீடு புகுந்து தீ வைப்பு!! கல்­வி­யங்­காட்­டில் சம்­ப­வம்

November 14, 2017 1:15 PM
1 0
வாள்­வெட்­டுக் குழு வீடு புகுந்து தீ வைப்பு!! கல்­வி­யங்­காட்­டில் சம்­ப­வம்

வாள்­வெட்­டுக் குற்­றச்­சாட்­டில் விளக்­க­ம­றி­ய­லில் இருந்து பிணை­யில் வந்­தி­ருந்­த­வ­ரின் வீட்­டுக்­குள் புகுந்த மற்­றொரு வாள்­வெட்­டுக் குழு பொருள்­களை அடித்­துச் சேதப்­ப­டுத்தி தீ வைத்­துள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் கல்­வி­யங்­காடு முக்­கு­று­ணிப் பிள்­ளை­யார் வீதி­யி­லுள்ள ஒழுங்­கை­யில் நேற்­றி­ரவு இடம்­பெற்­றது.

பல இடங்­க­ளில் வாள்­வெட்டு நடத்­திய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட 9 பேரில் ஒரு­வர் பல மாதங்­க­ளாக யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றி­னால் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

சில மாதங்­க­ளுக்கு முன்­னரே அவர் பிணை­யில் வெளி­யே ­வந்­தி­ருந்­தார். அவர் ஒரு மாண­வர். அவ­ரது வீட்­டுக்­குச் சென்றே நேற்று வாள்­வெட்­டுக் குழு இப்­ப­டிச் செய்­தது. பின்­னர் தீ அணைக்­கப்­பட்­டது.

கோப்­பாய் பொலி­ஸா­ருக்கு இது குறித்து அறி­விக்­கப்­பட்­டது. குறித்த மாண­வன் மீதான வழக்கு இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0